திமுகாவின் செருப்பை கூட யாரும் தொட முடியாது..! ஆளுநர் மீது பாய்ந்த ஆர்.எஸ்.பாரதி
நெல்லை மாநகர திமுக சார்பில் திமுகாவின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் திமுகாவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு, நெல்லையை சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிளி மற்றும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலை கொடுத்து கவுரவித்துள்ளார்.
அதில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதி, திமுகவிற்கு எத்தனை பேர் தான் சவால் விடுவார்கள்..? நேற்று கூட அண்ணாமலை சவால் விட்டு இருக்கிறார், திமுக சாதாரணமாக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல கடந்த 75 ஆண்டுகளாக கட்சியின் தொண்டர்கள் அனுப வைக்கும் துன்பங்களை, வேறு எந்த கட்சியும் அனுபவிக்க முடியாது.
ஒவ்வொரு தொண்டனும் ஆதங்கப்படுவான், இதனால் தான் யாராலும் திமுகாவை அழிக்க முடியவில்லை. மோடி அரசு திமுகாவை அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்காக பல திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.
இந்த மண்டபத்தில் வைத்து சொல்கின்றேன்.., “திமுகாவின் கால் செருப்பை கூட யாராலும் தொட முடியாது”. மிசாவையே பார்த்தவர்கள் தான் நாங்கள், இங்கும் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் வேறு எதாவது வேலைக்கு செல்லலாம், தமிழகத்தில் முதலைமைச்சருக்கு அவர் நோட்டிஸ் கொடுத்துள்ளார்.
அந்த நோட்டிஸ், அடுத்த 4 மணி நேரத்திலேயே திரும்ப பெற பட்டு விட்டது. இன்னும் நான் பச்சையாக சொல்ல வேண்டும் என்றால், “திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை எங்களுக்கு ஆளுங்கட்சி என்ற உணர்வு இல்லவே இல்லை. அந்த அளவிற்கு கட்சி தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
அதிமுகாவினர் ஊரை அடித்து உலையில் போட்டு கோடி கோடியாக சம்பாதித்து வைத்துள்ளார்கள். ஆனால் எங்கள் கட்சியினர் 10 ஆண்டுகள் ஜெயிலுக்கு சென்றவர்கள், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.
அதற்காக தொண்டர்களும் சோர்ந்து போக வில்லை.., முதல்வர் ஒரு அறிக்கை கொடுத்ததும் முதன் முதலாக வந்து நிற்பது தொண்டர்கள் மட்டும் தானே தவிர , பதவியில் இருப்பவர்கள் இல்லை என ஆவேசமாக பேசினார்.
Discussion about this post