999 ரூபாய்க்கு ஜியோ போன்..!! மாதம் 14 ஜிபி டேட்டா..!!
ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ பாரத் போனுக்கு அதிக ஆஃபர்கள் வழங்கியுள்ளது. இதனால் ஏராளமானோர் ஜியோ பாரத் போன் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த சில வாரங்களாகவே ஜியோ பாரத் என்ற அதிரடி ஆஃப்பர் வெளியிடப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
அந்த வகையில் இன்று ஜியோ பாரத் போன் அறிமுகமாகியுள்ளது. குறைந்த விலையில் போனும், ஆஃபர்களும் கொடுத்துள்ளதால் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும். இந்த ஜியோ போனின் விலை 999 ரூபாய்க்கு அறிமுக படுத்தியுள்ளது.
இந்த போன்கள் ஜூலை 7ம் தேதி முதல் விற்பனைக்கு வந்து விடும் என்றும், கோடி கணக்கில் இந்த போன்கள் விற்பனையாகும் என்றும் தெரிவித்துள்ளது.
அதற்கு முதற் கட்டமாக முதலில் 10 லட்சம் போன்கள் மட்டுமே வருகிற 7ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்றும், மற்ற போனிற்கு மாதாந்திர ரீசார்ஜ் 179 ரூபாய்க்கும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜியோ போனிற்கு 123 ரூபாய் ரீசார்ஜும் 14ஜிபி டேட்டாவும் கிடைக்கும், வருடாந்திர ரீசார்ஜ்ஜிற்கு 1234 ரூபாய்க்கும் 168 ஜிபி டேட்டாவும் பெற்றுக்கொள்ளலாம். இந்த பாரத் ஜியோ போனை பயன் படுத்துவதன் மூலம் 30 சதவிகித செலவை வாடிக்கையாளர்கள் பணம் சேமிக்க முடியும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.