இனி நோ பெயில் ஒன்லி ஜெயில்..!! பாஜக அமர்பிரசாத் மீது பாய்ந்த குண்டாஸ் சட்டம்..!!
பாஜகவின் கொடிக்கம்ப வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது ஒரே நாளில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்.. அமர் பிரசாத் ரெட்டி மீது மூன்றாவதாக ஒரு வழக்குகள் பாயந்துள்ளது. எனவே அவரை குண்டார் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..
தமிழ்நாடு பாஜகவின் மாநில இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருப்பவர்.., அமர் பிரசாத்தின் வேலையே பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வது தான்.., அண்ணாமலை நடத்தி வரும் பாதயாத்திரையின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
பல்வேறு சர்ச்சையில் சிக்கி வந்தவர் தான் இந்த அமர்பிரசாத் ரெட்டி.., அண்மையில் சென்னை அருகே பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த.., கொடிக்கம்பத்தை அகற்றியதை எதிர்த்த போராட்டத்தில் அமர்பிரசாத் ரெட்டியும் கலந்து கொண்டார்.
அப்போது ஜேசிபி இயந்திரத்தை தாக்கி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.. அந்த சமயம் நீதிமன்றம் தொடர் விடுமுறையில் இருந்ததால் ஜாமீனில் வெளிவர முடியாமல் இருந்தார்
இந்நிலையில் நேற்று ஒரேநாளில் மேலும் 2 வழக்குகள் அம்ர்பிரசாத் ரெட்டிமீது பதிவு செய்யப்பட்டது.., இதனால் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கம் அவர் அங்கேயே மேல் வழக்கின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டார்..
செஸ் ஒலிம்பியா போட்டிகளின் போது தமிழ்நாடு அரசின் விளம்பர பலகைகளை சேதப்படுத்தி.., அதன் மேல் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி பேனர் வைத்தார் இதனால் அமர்பிரசாத்தை கோட்டுர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்த போலிசை அவதூறாக பேசி.., பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.., இந்நிலையில் அமர்பிரசாத் மீது மூன்றாவது வழக்கும் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post