முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அய்யாராசு குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டார் அப்போது அவர். நான் நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்று வருவது தான் எனக்கு பெருமை என்று பேசியுள்ளார்.
திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வரும் பொழுது பெருந்தொற்று காலம் அதிலிருந்து மீண்டோம், அந்த காலகட்டத்தில் முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களும் ஹெல்த் மினிஸ்டராக மாறினோம் அதனால் தான் கொரோன தொற்றை கட்டுபடுத்த முடிந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெள்ளம் வந்தது அதையும் இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டு பெரும் சேதங்களை தடுத்தது.
இப்பொழுது பெரும் புயல் வந்தது அதையும் துரிதமாக செயற்பட்டு பெரிய பாதிப்புகளை தடுத்தோம். பெரும் புயல்களை சமாளிக்கும் திறன் திமுகவிற்கு இருக்கிறது என்றால், கலைஞர் கூறியது போல் ‘உழைப்பு… உழைப்பு… உழைப்பு… உழைப்பு தான் நமது மூலதனமாக இருக்க வேண்டும். அதைத்தான் ஸ்டாலின் இடத்தில் நான் பார்க்கிறேன்’ இந்த உழைப்பை பயப்படுத்தித்தான் நான் மட்டுமல்ல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நமது கழகத் தோழர்கள் போன்றவர்களின் கழகம் வளர வேண்டும் என்று அவர் செய்யும் அர்பணிப்பே இந்த வெற்றிகளை கம்பீரமாக மக்களிடம் சொல்ல முடிகிறது என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நெற்றிலுந்து போன் கீழேயே வைக்கவில்லை அனைவரும் தொடர்பு கொண்டு சிறப்பாக செய்துவிட்டீர்கள் என்றும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர். மேலும்,இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி என்னை நம்பர் 1 முதல்வர் என்றார் அனால் நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்று கூறுவதில் தான் பெருமை என்று அவர் தெரிவித்தார்.