முக்கிய ஆவணங்களில் ஒன்றான பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரி துறை அறிவித்துள்ளது இல்லையென்றால் பான் கார்ட் பிரயோஜனமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.
பான் கார்டு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்துவோருக்கும் வழங்கப்படும் அடையாள எண் இது ஒரு மின்னணு அமைப்பாகும் இதன் மூலமே ஒரு தனிநபர் அல்லது நிறுவனங்களின் அனைத்து வரி தொடர்பான தகவல்களும் ஒரே பான் எண்ணில் பதிவு செய்யப்படும். இந்த பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க ஒன்றிய அரசு பல திட்டங்களை அறிமுகபடுத்தி வருகிறது. இருப்பினும் பல பான் கார்டுகல் இணைக்கப்படாமலே இருக்கின்றன.
As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.
From 1.4.2023, the unlinked PAN shall become inoperative.
The last date is approaching soon.
Don’t delay, link it today! pic.twitter.com/OcvtJfewH2— Income Tax India (@IncomeTaxIndia) December 10, 2022
இந்நிலையில் வருமான வரி துறை ட்விட்டேர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது அதில், வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.03.2023-க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 01.04.2023 முதல் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கள் செயலிழந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.