அயன் பட பாணியில் நைஜீரியா நாட்டு கரன்ஸி மாற்றம்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜன்சி வைத்து நடத்தி வரும் அசோக்குமார் என்பவரிடம் போலியான வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவனை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்த ஈரோடு அரசு மருத்துவமனை காவல்துறையினர்….
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அபி டூர்ஸ் டிராவல்ஸ்
என்ற பெயரில் ஈரோட்டில் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இவரது டிராவல் ஏஜென்சி மூலமாக தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பணம் கொடுப்பது, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், திருப்பதி கோயிலுக்கு சென்றுவர முன்பதிவு செய்வது போன்ற செய்து கொடுக்கப்படும் என இணையதளம் மூலமாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வந்தார்.
இந்நிலையில் அசோக்குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது டிராவல் ஏஜென்சியை மூடிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கேட்கும் பொழுது வெளிநாட்டு பணத்திற்கு இந்திய பணத்தை மாற்றி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. அசோக்குமார் இணையதளத்தில் செய்துள்ள விளம்பரத்தை பார்த்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு மருத்துவமனை சிகிச்சைக்காக அவசரமாக 500 டாலர் அமெரிக்க மதிப்பு பணத்திற்கு பதிலாக இந்திய மதிப்பு விழா பணம் தேவை என அணுகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அசோக்குமார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலைக்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நாதன் இகேச்சுக்வு வரச் சொல்லி 500 அமெரிக்க டாலர் பணத்தைக் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக இந்திய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
அமெரிக்க டாலரை வாங்கி ஆய்வு செய்தபோது இது போலியான அமெரிக்கா டாலர் என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அசோக் குமார் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் இடம் சென்று புகார் தெரிவித்தார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்த காவல்துறையினர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு கைது செய்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியை ஜவுளி விற்பனை செய்து வருவதாகவும் ஏற்கனவே கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் இதேபோன்று வெளிநாட்டு கரன்சியை போலியாக கொடுத்து கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல்துறையினர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஈரோட்டில் அமெரிக்க டாலர் மதிப்பிலான போலியான பணத்தை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..