ஜூனியர் மருத்துவர்களின் போரட்டம்… சீனியர் மருத்துவர்கள் பாதிப்பு..!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பயிற்சி மருத்துவராக பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். கடந்த 8-ஆம் தேதி அன்று, அவர் இரவு நேர பணியில் இருந்துள்ளார். அடுத்த நாள், அந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில், சடலமாக கிடந்துள்ளார்.
பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்படுவதற்கு முன்பு தொடர்ந்து 36 மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். தனது உடல்நிலையை கருத்தில்கொள்ளாமல் ஓய்வின்றி 36 மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கடமை ஆற்றி வந்த மருத்துவர், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது ஒட்டு மொத்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள மருத்துவருக்கு, நீதி கிடைக்க வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்று வருகிறது.
11 நாட்கள்:
இக்கொடூர சம்பபம் அரங்கேறி இதுவரை 11 நாட்கள் ஆகிய நிலையில், அவருக்கான நீதி எங்கே என கேள்வி எழுப்பியும், பணியிடத்தில் சிறந்த பாதுகாப்புக்காக சட்டம் இயற்றுமாறும் ஜுனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் இந்த போரட்டத்தினால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனியர் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”