மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான உல்லாஸ் பந்தளத்தின் மனைவி தற்கொலை செய்து கொண்டது மலையாள திலரயுலகையும், மலையாள சினிமா ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவின் காமெடி நடிகரான உல்லாஸ் பந்தளம் என்பவர் மலையாள சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இவருக்கு ஆஷா என்பவருடன் திருமணமாகி அவர்களின் குழந்தைகளுடன்பத்தினம்திட்டா பகுதியில் உள்ள பந்தளம் என்ற இடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் முதலில் அவரது வீட்டிற்கு சென்று போலீசால் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள அறையில் அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து அது தொடர்பாக விசாரணையை நடத்தினர். விசாரணையின் போது உல்லாஸ் மற்றும் அவரது மனைவிக்கு இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. அடுத்த நாள் காலையில் மனைவி ஆஷாவை கனவில் என்று காவல் துறையில் புகாரளித்துள்ளார்.
ஆஷாவின் மரணம் குறித்து அவரது தந்தை கூறியபோது, தனது மகள் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே நான் இது குறித்து புகார் அளிக்க விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்த மரணம் தற்கொலை தான் என்று போலீசார் கூறுகின்றனர். இருந்த போதிலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர் ஆஷாவின் இந்த மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.