அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..! உடல்நலம் பாதிப்பு குறித்து மருத்துவர்கள் விளக்கம்..!
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து 65 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஏறக்குறைய திமுக அங்கு வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், சென்னை அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் முதல்வரை சந்தித்து வாழ்த்து சொல்ல அறிவாலயத்துக்கு வந்துள்ளார்.
அப்போது, அவருக்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. பதறி அடித்த எம்.எல்.ஏ எழிலன் அவருக்கு முதலுதவி செய்து உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதற்கட்ட தகவலின்படி, ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து துரைமுருகன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..