“சத்தம் பத்தாது விசில் போடு.. ஹே நண்பி நண்பா விசில் போடு..” மிரள வைத்த கோட்..!!
கோட் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது அதன் படி நேற்று மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
வெங்கட் பிரபு இயக்கியுள்ள தளபதி 68 “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” என்ற திரைப்படம்.. அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது..
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் தான் “Greatest Of All Time” (GOAT).. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இதற்கு முன் வெளியான தளபதியின் லியோ படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றது என சொல்லலாம்.., படத்தின் பாடல் முதல் சீன்கள் என அதை நீக்க வேண்டும், தளபதி சிகரெட் பிடிப்பது நீக்க பட வேண்டிய காட்சி என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தும் விஜய் ரசிகர்களால் படம் நல்ல வசூலை பெற்றது என சொல்லலாம்.
அதன் பின் தற்போது வெளியாக உள்ள GOAT திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் நல்ல ஹிட் கொடுத்துவிட்டது என சொல்லலாம்.., எனவே படமும் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு பலரின் மனதிலும் தோன்றிவிட்டது.
இப்படியாக படம் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.. இந்த படத்தில் அப்பா, மகன் மற்றும் அவரது மகன் என் தளபதி விஜய் 3 வேடங்களில் நடித்துள்ளார்.. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில்., தற்போது இதன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிக உற்சாகமம் அடைந்துள்ளனர். இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்த தளபதி கோலிவுட் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டு வரும் நிலையில்.. “கோட்” திரைப்படமும் நல்ல வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
முதல் பாடல் :
இந்த பாடல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரையும் வைப் செய்ய வைக்கும் ஒரு பாடல் என சொல்லாம்..
“பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா?
கேம்பனை தான் தொறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?
இடி இடிச்சா என் வாய்ஸ் தான். வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்
குடிமகன் தான் நம் கூட்டணி, பார்ட்டி விட்டு தான் போ மாட்டேன் நீ”
“சத்தம் பத்தாது விசில் போடு, குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு ஹே நண்பி நண்பா விசில் போடு…”
இரண்டாம் பாடல் :
தன்னுடையை மனைவியை வாழ்நாள் முழுவதும் மனைவியாக மட்டுமல்ல காதலியாக பார்க்கும் ஒரு பாடல் என சொல்லலாம்…
உறவெல்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இரவெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
தோழி உனைப் பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை..
ரெட்டை ஜடை வாசனை..
நீதானா..? நிஜம்தானா..?
மூன்றாம் பாடல் :
இப்போ இருக்க ஜெனெரேஷன்ஸ்க்கு பிடித்த ஒரு பாடல் என சொல்லலாம்.
“அவ கண்ணால பாத்தா., ஒரு ஸ்பார்க்-க்கு
என் முன்னால நடந்தா., கேட் வாக்-க்கு
ஏய் ஸ்விங் இட் – ஹே பிரேக் இட் – ஹே ஃபீல் இட் – ஹே டச் இட்..”
நேற்று மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் வெளியான நிலையில் 24மணி நேரத்திற்குள் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..