தவெக விஜய் கட்சி பூ…? வாகை சூடுவாரா தளபதி..!!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் தளபதி விஜய் தொடங்கி வைத்தார்.. கட்சி தொடங்கி ஓர் ஆண்டிற்குள் அக்கட்சியின் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் ரீதியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு.. சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்..
அதன் பின் டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கினார்.. கடந்த மாதம் கூட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் ரீதியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு.. சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்..
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி ஓர் ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை கட்சியின் சின்னமோ கட்சியின் கொடியோ அறிவிக்கப்படவில்லை.., அதே சமயம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எந்த மாவட்டத்தில் நடத்தப்போவது என்று திட்டமிட்டுள்ள நிலையில்.., தற்போது கட்சியின் பூவாக (வாகை) பூவை தவெக வெளியிட்டுள்ளது..
வாகை பூவானது அந்த காலத்தில் மன்னர்கள் போருக்கு சென்று அதில் வெற்றிப் பெற்ற பின் அவர்களுக்கு சூடப்படும் பூ “வாகை பூ”.. எனவே இக்கட்சியும் இப்பூவை தேர்வு செய்து இருப்பது கட்சி தரப்பினரிடம் மட்டுமின்றி ரசிகர்களிடயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதே சமயம் “வாகை சூடப்போகும் தளபதி” என்று பலரும் கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு 4 மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..