உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ நாட்டியாலயா லக்ஷனா குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், ஈரோடு தமிழி நாட்டியப்பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் நாட்டிய நிகழ்ச்சி கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பத்தை வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலையை அடுத்த சரளபதி பழங்குடி இனத்தை சேர்ந்த சங்கர், தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நித்யானந்த பிரபு என்பவரிடம், 34 ஆயிரத்து 600 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் 1 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டி விகித்துள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால், பொள்ளாச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கௌதம் பேட்டை பகுதி சார்ந்த பிரபு என்பவருடைய வீட்டில் அரிய வகை ஆந்தை ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், அங்கு வந்த அதிகாரிகள், கொட்டகை ஆந்தையை மீட்டு வனப்பகுதிக்கு எடுத்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில், முத்து பாலுடையார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் 13 மாட்டு வண்டிகளும், பெரிய மாட்டு வண்டிக்கு 8 கிலோமீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோமீட்டர் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தில் மதுபோதை இளைஞர் சிகரெட் வாங்கி விட்டு பணம் தர மறுத்துள்ளார். மேலும் பேக்கரி பணியாளர்கள் வரதராஜன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பேக்கரி உரிமையாளர் சந்தனகுமார், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கருப்புசாமி, விக்கி மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..