நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் முழக்கமீட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து 300க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 77 வது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியினை அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.எல்.ராமு, மற்றும் பழனிவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே, கழக செயலாளர் குமார் மற்றும் மாவட்ட கழக செயலாளார் வீரமணி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த, தருண், சரண், கவிசாண்டில்யன், மணிகண்டன், சஞ்சய், மற்றும் நவீன் ஆகிய 6 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..