விசாரித்தால் தான் மர்மம் வெளி வரும்..!! “எடப்பாடி பழனிசாமி உனக்கு புத்தி வராது..” அதிமுக புகழேந்தி விமர்சனம்…!!
கொடநாடு கொலை வழக்கில் உடனடியாக எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் வேறு வழியின்றி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்க வேண்டி வரும்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்திய பின் இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி,
அட்சய பாத்திரம் ,5 எழுத்து மந்திரம், திராவிடத்தின் திருவிழா தமிழகத்தின் ஒளிவிளக்காக வாழ்ந்த, பொன்மனச் செம்மலின் பொக்கிஷமாக வாழ்ந்த நாடு போற்றும் திட்டங்களை கொண்டு வந்து எங்கள் நெஞ்சங்களில் வாழ்ந்த பூமி உள்ளவரை அவரது புகழ் மறையாது என்பதற்கு ஏற்ப வாழ்ந்து மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்.
இங்கு அரசு சார்பில் இந்த விழா இங்கே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் அரசு அதிகாரிகளை வைத்து மரியாதை செய்து இருக்கிறார்கள் அதை வரவேற்கிறோம். நான் அன்போடு எல்லோருக்கும் முதல்வர் என்று அழைக்கும் ஸ்டாலின் அவர்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன், கொடநாடு கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் கூட ஆணையை சிறப்பித்து உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் பழனிச்சாமியின் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
18 பேரை விசாரிக்க சொன்ன பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்ததால் அவரை விசாரிக்கவில்லை. உயர் நீதிமன்றம் ஏன் விசாரிக்கக்கூடாது அன்று அவர் உள்துறை அமைச்சர். அவர் கட்டுப்பாட்டில் தான் போலீசில் இலாக்கா இருந்தது விசாரிக்க உத்தரவிட்டும் இதுவரை விசாரிக்கவில்லை.
தமிழக முதல்வரை ஏற்றுக்கொள்கிறேன் தயவு செய்து பழனிச்சாமி விசாரிக்கப்பட வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளார். விசாரித்தால் தான் மர்மம் வெளியே வரும். அவரை விசாரிக்காமல் இருப்பது தான் பெரிய மர்மமாக இருக்கிறது. பதவி எதுவும் இல்லாமல் வழக்குக்காக மட்டும் பல ஆண்டுகள் அலைந்தவன் நான்.
சொத்துக்களை பணையமாக வைத்தவன். உங்கள் புன்னகை மட்டும் போதும் என்று சொன்னவர் மதுசூதனன் அதற்காக மட்டும் நாங்கள் பணியாற்றினோம். எங்கள் தாய் இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. நகராட்சியும் மாநகராட்சியும் தேடும் வெறி பிடித்த நாய்கள் எல்லாம் ஓநாயும் வெள்ளாடு பேசுகிறது.
பணத்தை கொடுத்து கவிதையும் கட்டுரையும் வாங்கிக் கொண்டு வெளியிடுகிறது அம்மாவின் பிறந்தநாளில் திட்ட வேண்டாம் என்று பார்க்கிறேன். வெறி நாய்கள் மட்டுமல்ல சொறி பிடித்த நாய்கள் இன்றைய தினம் பேசுகிறது. கலைகளும் பயிரும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமாய் என்று சொறி பிடித்த நாய் கேட்கிறது.
முதலமைச்சராக ஆக்கிய வரை நாய் கத்துகிறது என்று சொன்னவர். வேட்பாளரை தேட வேண்டிய நிலை வந்துவிடும். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் அதிமுக சேரவே கூடாது என்று செயல்பட்டு வருகின்றனர். ஓநாயும் வெள்ளாடும் கூட சேர்ந்து விடும் ஆனால் பழனிசாமி நீ திருந்த மாட்டாய் உனக்கு புத்தியும் வராது.
அம்மா பிறந்தநாளில் மீண்டும் எச்சரிக்கிறேன் இந்த கட்சியை பழனிச்சாமி நீ முழுவதும் அழித்து விடுவாய் நீ திருந்த வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை, கொடநாடு வழக்கில் உடனடியாக பழனிச்சாமியை விசாரிக்க உத்தரவிடுங்கள். இது தான் ஜெயலலிதா பிறந்த நாளில் தரும் பரிசாக இருக்கும். என இவ்வாறே அவர் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..