உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு 135 பயனாளர்களுக்கு ஆதரவற்றோர் விதவைச் சான்று, கிராமப்புற வீடு கலைஞர் கனவு இல்லம், பிரதமர் வீடுதிட்டம் , முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், என 1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாலதி மண் பானையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வேளாண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைந்து முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இம்மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்தையொட்டி மதுரை விமான நிலைய உள் வளாகம், விமான நிலைய ஓடுப்பதை மற்றும் விமான நிலைய சுற்றுப்புற கண்காணிப்பு கோபுரங்கள் , விமான நிலைய வெளிளாகம், அதிவிரைவு அதிரடிப்படை என ஐந்து அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட கால்நடைகளை பிடித்து நகராட்சி அலுவலகர்கள் பிடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை வெளியே விடமாட்டோம் என உறுதி அளித்த பின்னரே கால்நடைகள் விடுவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கிராமத்தில் அரசு சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிணற்றில் கலந்து மாடு மற்றும் மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய்தொற்று அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர் மற்றும் காவல் துறையினர் ஆலை நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கோட்டையூரை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு சொந்தமான விவசாயி நிலத்தில் உள்ள மரங்கள் மற்றும் வேலிகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. எனவே இழப்பீடு வேண்டியும் யானைகளை விரட்ட வனத்துறையினர் உடனடி நவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ராயநல்லூர் கடைவீதிகள் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கம் சார்பில் பருவம் தவறி பெய்த தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..