டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து…!! ஒன்றிய அரசு அறிவிப்பு…!!
டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் சுரங்கம் அமைய இருந்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழுவினர் டெல்லியில் ஒன்றிய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..