நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்காக….!!
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம் சேண்பாக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் மற்றும் இந்து முன்னணி பொருளாளர் பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட இந்து முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல பாரதியஜனதா கட்சியின் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் சரவணன் உள்ளிட்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கார்த்திகேயன் எருது விடும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் காளை முட்டியதில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூலித் தொழிலாளி கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் :
மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கிரஷரின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் :
தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலம் சார்பில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடி அசைத்து துவக்கிவைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், ஆய்வாளார் தரணீதர், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒட்டுனர் பயிற்ச்சி பள்ளி உரிமையாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு 135 பயனாளர்களுக்கு ஆதரவற்றோர் விதவைச் சான்று, கிராமப்புற வீடு கலைஞர் கனவு இல்லம், பிரதமர் வீடுதிட்டம் , முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் :
தமிழகத்தில் தொடரும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர். ராஜேந்திரன் தலைமையில் மாநகர தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சுப்புராம் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் சின்னவட்டானூர் பகுதியை சேர்ந்த தெய்வானை வீட்டின் பூட்டை உடைத்து ஏழு சவரன் தங்க நகைகள் மற்றும் 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் எவரேனும் கொள்ளை அடித்துச் சென்றனரா அல்லது அக்கம் பக்கத்தினரின் செயலா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..