உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வில் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார், நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையை சேர்ந்த ரமேஷ் மாரிமுத்து, கோல்டன் கல்வி நிறுவனர் மாசிலாமணி உட்பட முன்னூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா அம்மூர் மேட்டு தெருவை சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மகள் ரம்யா தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று வீட்டில் தெரிவித்ததாகவும் அதனை கண்டு கொள்ளாமல் பெற்றோர்கள் வலு கட்டாயமாக ரம்யாவுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறிய நிலையில் மனம் உடைந்து போன ரம்யா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ரம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி திருப்பூர் கிளை சார்பாக வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மசூதியில் ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி அகில இந்திய மகளிர் அணி துணைச் செயலாளர். ராபியா பஸரி தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கணினி மூலம் ஆசிரியர்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் வேலூரில் மிகவும் பழமை வாய்ந்த ஊரீசு கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வ்வியில் ஆனி கமலா ப்ராளன்ஸ் தலைமையில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் திரு உருவ படத்திற்கு ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் துணை முதல்வர் அன்பழகன், நிதி ஆளுநர் காலேப், முனைவர் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..