மாரியம்மன் கோவில் உண்டியலில் கிடைத்த 87 லட்சம் ரூபாய்..!!
வேலூர் மாவட்டம் அரியூர் தங்ககோவில் வளாகத்தில் உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல்துறை தலைவர் பாலசந்தர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இதில் 600 மாணவ,மாணவிகளுக்கு 1.50 கோடி மதிப்பில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பல உயர் கல்வியை பெறுவதற்கான கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றனர் .
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய குறும்பத்தெரு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அதேபகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களுடன் விவசாய நிலத்தில் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அந்த பகுதியில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாய நிலம் ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேசன் உள்பட 10 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கருப்பு பேஜ் அணிந்து காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அலுவலர்களுக்கும் சம்பளம் வழங்காததால் சில மாதங்களாகவே நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை மதுரை காமராஜர் பல்கலைகழகம் சந்தித்து வருவது குறிப்பிட்த்தக்கது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இராமமூர்த்தி மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டுது. உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 87 லட்சம் ரூபாய் ரொக்கமும் 207 கிராம் பலமாற்று பொன் இனங்களும், 1124 கிராம் பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றது.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அருப்புக்கோட்டை, திருமங்கலம், துலுக்கப்பட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..