உங்கள் ஊர் செய்திகள்..! உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
குமரிமுனையில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளிவிழா தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து வெள்ளிவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கினார்.
தர்மபுரி மொரப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே 25 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் திருவள்ளூவர் திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தந்தை பெரியார் அரசு மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் குறித்து பேச்சு போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் சின்னப்பா லெதர் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலையில் இருந்து தண்ணீர் வெளியேறி பாலாற்றுக்கு செல்லும் கால்வாயில் கலக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் தண்ணீர் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளார்.மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பொங்கல் திருநாளில் ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் பங்கேற்று தீர்மானங்களை நிறைவேற்றினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..