குறள் வாரம் கொண்டாடப்படும்…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி…!!
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதி நாட்களில் குறள் வாரம் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை அடுத்து வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்த்து பயனடைவதற்காக, படகு சவாரிகள் மேம்படுத்தப்பட்டு அவற்றிற்கு பெருந்தலைவர் காமராஜர், மார்ஷல் நேசமணி மற்றும் ஜி.யு.போப் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் திட்டம் வகுக்கப்படும் என்றும்133 உயர்கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய, அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் குறள் வாரம் கொண்டாடப்படும் என்றும் தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவ மாநாடு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..