நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்…!! மீண்டும் ஒரு பார்வை..!!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் அன்பரசன் அவருடைய முகநூல் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகக் கருத்துகளை பதிவிட்டுள்ளார். இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது என்ற புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு டன் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோவில் அருகில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அதனை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு எடுத்து சென்றுள்ளனர். மக்கள் நடமாடும் இடத்தில் பாம்பு படமெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் தொடர் பனிப்பொழிவின் காரணத்தினால் பூ வரத்து குறைந்துள்ளது. இதனால் மல்லிகை, முல்லை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு பண்டிகைகள் வருவதைத் தொடர்ந்து பூக்களின் விலை ஏற்றத்தால் சில்லறை வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகே மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் தலைமையில் நாதக நிர்வாகிகள் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..