அஜித்தின் விடாமுயற்சிக்கு வந்த புது சிக்கல்..!!
துணிவிற்கு பிறகு தன் 62 வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டு வரும் நடிகர் அஜித் படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.., ஆனால் விக்னேஷ் சிவன் விலகியதால் தற்போது இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது..
இந்த அப்டேடிற்கு பிறகு அடுத்த அப்டேட் எதுவும் கிடைக்கவில்லை.., வலிமை படத்திற்கு காத்திருந்ததை போல தற்போது விடாமுயற்சிக்கும் ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர்.. ஆனால் நடிகர் அஜித் இதை பற்றி எதுவும் கவலைப்படாமல் ஊர் ஊராக சுற்றி வருகின்றார்..
அதன் பின் படத்தை இயக்க தொடங்க சில நாட்களிலேயே படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் காலமானார்..,
ஒரு வழியாக இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிட்டு படத்தை இயக்க தொடங்கியதும்.., படத்தை அஜர்பைஜன் நாட்டில் எடுத்து கொண்டுள்ளனர்..,
அந்த நாட்டின் கிளைமேட் அஜித்திற்கு ஒத்துவராததால் தினமும் நடிகர் அஜித் ஷூடிங்கிற்கு தாமதமாக வருகிறார்.., இதனால் தினமும் ஷூட்டிங் இரண்டு மணி நேரம் காலதாமதமாவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..
கதைக்கு ஏற்ற இடம் என்பதால்.., இந்த இடத்தை மாற்ற முடியாது.., ஆனால் அஜீத் சிறிது ஒத்துழைப்பு கொடுத்து சீக்கிரம் ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டால் படத்தை சீக்கிரம் முடித்துவிட முடியும் என தெரிவித்துள்ளனர்..,
ஆனால் அதற்கு அஜித் என்னால் மற்றவர்கள் உழைப்பு வீண் போக வேண்டாம் என தன் உடலை வருத்தி கொண்டு நடித்துகொண்டு வருகிறார்..
Discussion about this post