அர்பன் கம்பெனி பியூட்டீஷனை அறையில் அடைத்து சித்திரவதை..!! திக் திக் நொடிகள்..!!
அழகுகலை சேவைக்காக சென்ற அர்பன் கம்பெனி நிறுவனத்தின் பெண்ணை தீ.நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து நான்கு மணி நேரம் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
அர்பன் கம்பெனி எனும் ஆன்லைன் நிறுவனம் வீட்டை சுத்தப்படுத்துதல், டாய்லெட் கிளீனிங், கிச்சன் கிளீனிங், ஏசி, வாஷிங் மெஷின் ரிப்பேர் மற்றும் சர்வீஸ், அழகு கலைகள், மேக்கப், எலக்ட்ரீஷியன் போன்ற பல வேலைகளை செய்து வருகின்றனர்..
ஆன்லைனில் புக் செய்தால் நம் வீட்டிற்கே வந்து வேலைகளை செய்து முடித்து விடுவார்கள்.., இந்த இணையதளத்தை நிறைய பெண்கள் அர்பன் கம்பெனியின் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர்..
அந்த வகையில் தி.நகரில் உள்ள பவித்ரா என்ற பெண் அர்பன் கம்பெனியின் மூலம் அழகு கலை சேவைக்காக புக் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கம்பெனி சார்பில் பெண் ஒருவர் சென்றிருந்தார்.
அர்பென் கம்பெனியின் பெண் ஊழியர் அந்த வீட்டு பெண்ணுக்கு தேவையான வேலைகளை செய்து முடித்துவிட்டு காசு கேட்ட போது, தகராறு செய்து அந்த பெண்ணை 4 மணி நேரம் வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடுமை செய்துள்ளார்..
இதுகுறித்து அந்த பெண் கூறியது, வேக்சிங், பெடிகியூர், ஐ ப்ரோ டிரிம்மிங் ஆகிய 3 சர்வீஸ்களுக்காக பவித்ரா புக்கிங் செய்தார். அதனால் நான் அந்த இடத்திற்கு சென்றேன்.
அதற்கு மொத்தம் 1175 ரூபாய் ஆகிறது.., ஆன்லைனில் குறிப்பிட்ட தொகையும் என் கையில் குறிப்பிட்ட தொகையும் கொடுக்க வேண்டும்.
பவித்ரா மொத்த பணத்தையும் கையில் தருவதாகவே புக் செய்திருந்தார்.., நான் 2 மணி நேரம் எல்லா சர்வீஸையும் முடித்துவிட்டேன். வேலைகளை செய்யும் போதே அந்த பெண் ஏதோ பேசிக் கொண்டே இருந்தார்.
நான் பதிலுக்கு எதையாவது பேசினால் என் ரேட்டிங்கில் கை வைத்து விடுவார்கள். பிறகு எனக்கு வேலையை கிடைக்காமல் போய்விடும். அந்த பயத்தில் நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டேன்..
எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டு அவர்களிடம் காசு கேட்டேன் அதற்கு அந்த பெண் நீ ஐ ப்ரோவை சரியாக டிரிம்மிங் செய்யவில்லை.., என பிரச்சினை செய்ய தொடங்கினார்.
நானும் சரி நீங்க ஐ ப்ரோவுக்கு மட்டும் காசை கழித்துக் விட்டு வேலைக்கான பணத்தை கொடுக்க சொல்லி கேட்டேன்.., அதற்கு பவித்ரா தர முடியாது என சொன்னார். அத்துடன் என்னை அவதூறாக பேசி அசிங்கமாக திட்ட தொடங்கினார்.
உடனே அங்கு வந்த பவித்ராவின் கணவர்.., கதவை மூடிவிட்டு என்னிடம் சண்டை போட ஆரம்பித்தார் நானும் சார் உங்க மனைவியின் ஐ ப்ரோவை பாருங்க. எதாவது தவறு இருந்தா என் மீது புகார் கொடுங்க என சொன்னேன்.
அதற்கே நான் எதிர்த்து பேசுவதாக கூறி என்னை கீழே தள்ளிவிட்டார்.., பின் நான் போலிசுக்கு போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு கால் செய்தேன். எல்லார் போனும் ஸ்விட்ச் ஆப்.
பின் என் தோழிக்கு கால் செய்து நடந்தவற்றை சொன்னேன்.., பின் என் தோழி போலீஸுக்கு போன் செய்து அவர்கள் வந்து என்னை மீட்டனர்.. போலீசிடம் பவித்ரா ஆன்லைன் மூலம் பணம் தருவதாக கூறினர்.
அவர்கள் சொன்ன அந்த ஒரு வார்த்தையை மட்டும் கேட்டு கொண்ட போலிஸ் எனக்கு நடந்ததை பற்றி எதுவும் கேட்கவில்லை..,
ஒரு சிலர் வேலை முடிந்த பின் பேமெண்ட் என கேட்டால் இப்படி தான் பண்றாங்க.., இப்போ எல்லாம் எங்களுக்கு பாதுகாப்பே இல்லை.., நிறுவனத்தில் புகார் அளித்தால் எங்களை சமாதானம் செய்துவிட்டு அடுத்த ஆர்டரை கொடுத்து விடுவார்கள்.., பெண்களின் இந்த நிலை மாறவேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்..
Discussion about this post