அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய சட்டங்கள்..!! சுய தொழில் மற்றும் நிறுவனங்கள் நடத்துபவர் கவனத்திற்கு..!!
மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டு உள்ளது.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை வருகிற 1-ந்தேதி முதல் கடுமையாக பின்பற்றப்படும். அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
அக்டோபர் 1-ம் தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு, ஆவணமாக இணைக்க வேண்டும்.
பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அக்டோபர் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஒரே அரசு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம். அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலாகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..