இதை நீங்க செய்யலைனா உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும்..!! உஷார் மக்களே உஷார்..!!
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு :-
செப்டம்பர் 30-ம் தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு ப ரிந்துரையாளர் (நாமினி) ஒருவரின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.., 2023 முதல் 24ம் ஆண்டு வரை பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த படும் எனவும் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இனி 7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூபாய் 7 லட்சத்துக்கும் குறைவான செலவினங்களுக்கு 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும்.
ரூபாய் 7 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும். வெளிநாட்டு கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீகிதத்தில் குறைந்த டி.சி.எஸ். விகிதம் செலுத்த நேரிடும்.
மேலும் மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகள் ஏற்படும் பட்சத்தில் டி.சி.எஸ். 5 சதவீதமாக கட்ட வேண்டும்.
மியூச்சுவல் பண்டுகளை போலவே டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியின் பெயரை செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அவரவரின் கிளைகளுக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..