நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு..! 7 பேருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை விடுதலை வழங்கி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
சென்னையில் மிகவும் புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவர் சுப்பையா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்..
சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு :
அதில் மருத்துவர் சுப்பையா சொத்து பிரச்சனையில் கொல்லப்பட்டது தெரியவந்தது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சென்னையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், இன்ஜினியர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னு சாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு :
இந்த வழக்கில் மரண தண்டனை மற்றும் இரட்டை ஆயுள்தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலும், தண்டனையை உறுதி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த வழக்குகள் மீதான விசாரணையை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
குற்றவாளிகள் தரப்பிலான, விசாரணையை நீதிமன்றம் முறையாக தங்களது வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றும் கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் முறையாக நிரூபிக்கப் படவில்லை என்றும் விவாதிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அதில் மரண தண்டனை வி திக்கப்பட்ட அனைவருக்கும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்.
7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
-லோகேஸ்வரி.வெ