கஞ்சா விற்பனை வழக்கில் 3 சிறுவர்கள் கைது..! பின்னியில் இருப்பது ..?
கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது. இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு டோல்கேட் அருகே செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது. திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது
அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மூன்று பேரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் இரண்டு சிறார்களான கிருஷ்ணன் (18) சூர்யா (17) என்பது தெரியவந்தது.
மூன்று பேரையும் கைது செய்த செங்கம் போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது.., யாரெல்லாம் இதில் கூட்டணியில் உள்ளார்கள். எங்கெல்லாம் விற்பனை செய்துள்ளார்கள் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான கஞ்சா புழக்கம் மற்றும் சிறுவர்கள் மாணவர் கள்கஞ்சா நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், கஞ்சா கடத்தியதாக இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..