“படிக்காமலே பெரிய ஆள் ஆகிட முடியும் நினைக்க வேண்டாம்..” முதலமைச்சர் ஸ்டாலின்..!
அரசு பள்ளிகளில் படித்து முடித்து அதன் பட்டபடிப்பிற்காக கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவிதொகை “தமிழ் புதல்வன்” என்ற திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று “ஐம்பெரும் விழா” நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற 1761 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்..
அதனை தொடர்ந்து பேசிய அவர்.., படிக்காமலே பெரிய ஆள் ஆகிட முடியும் என சிலர் சொல்லுவதை கேட்டு இன்றைய கால மாணவர்கள் மட்டும் இளைஞர்கள் அதை மனதில் உறுதி படுத்திக்கொள்ள வேண்டாம்.. ஒருவரின் கல்வி தான் அவரின் அடையாளமாக மாறுகிறது.. என்பதை நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்..
மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய திட்டங்கள், மற்றும் அடைப்படை வசதிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நீட் போன்ற மோசடி விரைவில் ஒழிக்கப்படும்.. அதற்கு சரியான முடிவு விரைவில் கட்டப்படும்.
முதன்முதலில் நீட் ஒழிக்கப்பட வேண்டுமென குரல் கொடுத்தது “தமிழ்நாடு” தற்போது பிற நாடுகளும் கூற தொடங்கிவிட்டது. இதற்கு சீக்கிரமே ஒரு விடிவுகாலம் பிறக்கும் எனவும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..