“நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர்” பிரதமர் மோடி வாழ்த்து..!!
ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..
பாரிஸில் நடைபெற்று ஒலிம்பிக்சில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.. அதில், இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா போட்டியிட்டுள்ளார்.,
முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இடையே கடுமையான போட்டி நடந்தது.. மொத்தம் 6 வாய்ப்புகளில் நீரஜ், அர்ஷத் இருவருக்குமே கொடுக்கப்பட்ட நிலையில் 6வது வாய்ப்பில் நீரஜ், பாகிஸ்தான் வீரர் அர்ஷத்தை விட முன்னேறி சென்றார்..
நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்து 4 வெண்கலத்துடன் 5 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்..
ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு “பிரதமர் மோடி எக்ஸ் வலைதளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது “நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர்.
மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார் அவரால் தேசம் பெருமை கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..