நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அதில், இந்திய நாடு ஏழைகள் இல்லாத நாடாகவும், மத்திய வர்க்கத்தினரும் நல்ல நிலையில் இருப்பவர்களாக அடுத்த 25 ஆண்டுகளில் மாற வேண்டும் என்றும், 9 ஆண்டுகளில் இந்தியாவை, உலகம் பார்க்கும் பார்வை மாறியுள்ளதாக கூறினார்.
மேலும், வெளிநாடுகளின் ஆதரவில் இருந்த இந்தியா சொந்த காலில் நிற்க ஆரம்பித்து சுயசார்பு நாடாக மாறி வருவதாக, இந்தியாவின் நன்மைக்காக அரசு எடுத்த முடிவை உலக நாடுகள் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், அனைவருக்குமான வளர்ச்சி என்ற விதத்தில் அரசு செயல்பட்டு வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிய அரசு மிகச்சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.