சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கொச்சையான தகவல்களை பரப்பிய பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பேசிய காயத்ரி ரகுராம்,
ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு என்பவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்,
மேலும், பாஜகவில் இருந்த போது பாஜக கட்சியில்
தனக்கும் சில கட்சி பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் அறிந்து கொண்டு கட்சியிலிருந்து விலகியதாக கூறிய அவர்,
தன் படத்தை தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் பரப்பபட்டு வருவதாகவும், இதற்கு அண்ணாமலையின் தனி தகவல் தொழில் நுட்ப பிரிவு தான் காரணம் என தெரிவித்தார்.
அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பு ஏற்றதிலிருந்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும். அண்ணாமலையில் செயல்பாடுகள் தவறாகவும், தன்னை கொச்சையாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.