தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்தார்.
அப்போது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் செபி தரப்பில் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இடங்களில் சோதனை நடத்திய பின்னர் சித்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம்(மார்ச்.05) அன்று விசாரணைக்கு வந்தபோது அதனை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று(மார்ச்.06) இரவு சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் வைத்து சித்ராவை கைது செய்துள்ளனர்.