தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவின் 3வது பெரிய துறைமுகமாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது; அதனால்தான் அறைகலன் பூங்காவை இங்கு அமைக்க திட்டமிட்டோம். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் அறைகலன் பூங்கா அமைய உள்ளது பெருமைக்குரியது; நகரங்கள் மாநகரங்களாக மாற வேண்டும்.
தமிழ்நாட்டின் வளத்தை பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே நமது அரசின் நோக்கம்; திராவிட மாடல் இலக்கை நோக்கி நாம் செயல்பட்டு வருகிறோம் . விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது .
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும்”, என கூறியுள்ளார்.
Discussion about this post