உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 11 நாட்கள் தாக்குதல் நடத்தியது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றி உள்ளது.
கடந்த 11 நாட்களாக நடந்த தொடர் தாக்குதலால், பல நகரங்களில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையில், ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று(மார்ச்.07) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், போர் விவகாரம், இந்தியர்கள் வெளியேறுவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.