போதைப்பொருள்கள் கடத்தல்.. வடமாநிலத்தவர்கள் கைது…!!
அரூரில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த கார் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக., காவல்துறையினர் பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தியும்., அடிகடி வாகன தணிகையில் ஈடுபட்டு போதைபொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
பெங்களூரில் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 357 கிலோ புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி வருவதாக அரூர் காவல் ஆய்வாளர் செந்தில்ராஜ் மோகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அரூர் ரவுண்டானாவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதி வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனதில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா போன்ற போதை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
போதை பொருட்களை கடத்தி வந்த இருவரையும் பிடித்து அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, தர்மபுரி மாவட்டம் அரூர் பஜார் தெருவில் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார், நாராயணசிங், இருவரும் சில்லறை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
போதைப்பொருட்களை கடத்த பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, போதைப் பொருள் கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை கடத்திய சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..