18 வயது சிறுவர்கள் சாகசம்..!! பெற்றோர் கைது..!!
வேலூரில் 18 வயது நிரம்பாத சிறுவரிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்தனுப்பிய பெற்றோர் மீது வழக்குபதிவு செய்து கைது….
வேலூர் மாவட்டம், வேலூரில் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் வாகன சோதனையை மேற்கொண்டனர் அப்போது மூன்று இளம் சிறார்கள் ஒரு பெரிய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை மடக்கி பிடித்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி மூன்று சிறார்களையும் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் கணியம்பாடியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் அவரது புதிய இருசக்கர வாகனத்தை அவர் சென்னையில் பணியாற்றுவதால் அவருடைய மாமா சுந்தர் என்பவரிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்..
இதனை அறிந்த ஆகாஷின் அக்காள் மகன் கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் இவர் சுந்தரிடமிருந்து 18 வயது நிரம்பாத அந்த இளம் சிறார் இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு இரண்டு நண்பர்களுடன் வேலூர் வந்தது விசாரணையில் தெரியவந்தது..
மூன்று பேரும் பள்ளி மாணவர்கள் என்பதால் அந்த வாகனத்தை கொடுத்து அனுப்பி சுந்தரத்தை வடக்கு காவல்நிலைய காவல்துறையினர் எட்டு பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோட்டார் வாகன சட்டப்படி சம்பந்தபட்ட வாகனத்தின் பதிவு சான்றை 12 மாதங்களுக்கு ரத்து செய்தும் மேலும் வாகனத்தை ஓட்டிய இளம் சிறார் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறுவதை தடை செய்யுமாறும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பாத சிறுவர்களை புதிய மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பது தற்போது வேலூரில் துவங்கியுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..