துன்பங்கள் நீக்கும் நந்தி வழிபாடு..!! இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்..!!
வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்காத மனிதர்கள் எவரும் இல்லை அப்படியாக துன்பம் வரும் வேளையில் இவரை வணங்கினாலோ அல்லது வீட்டில் இந்த வழிபாட்டை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம்..
சிவபெருமானின் கனபூதங்களில் ஒருவராக நந்தீஸ்வரர். இவரின் அனுமதியின்றி சிவனை நம்மால் வழிபட முடியாது.. மீறி வழிபட்டாலும் பலன் கிடைக்காது என சொல்லுவார்கள்..
சிவன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் முன்னதாக நந்தியை வழிபட்ட பின்னரே சிவனை வணங்க வேண்டும்…
முக்கியமாக பிரதோஷம் நாட்களில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்..
அதேபோல் கஷ்டம் வரும் நேரத்தில் நந்தீ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, நோய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம்..
இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தே செய்யலாம் வீட்டில் இருந்து வழிபாடு செய்பவர்கள்
மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் சிவபெருமான் படத்திற்கு முன் அமர்ந்து நந்தீஸ்வரர் மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்..
அதுவே பிரதோஷம் நாட்களில் வழிபட்டால் நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்..
நந்தி மந்திரம் :
“நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி
ப்ரசோதயாத்…”
எனும் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி விடும் என்பது ஐதீக உண்மை..