அழகான சருமத்திற்கு நச்சுனு ஒரு டிப்ஸ்..!!
சரும பாரமரிப்பில் தான் பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.., வறண்ட சருமம் மென்மையாகவும், என்றும் பொலிவுடன் இருக்கவும் சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
வெள்ளரிக்காய், தக்காளி பேஸ்ஃபேக் :
வெள்ளரிக்காய் பல்வேறு சாராமரிப்பு பொருட்களில் முக்கியமான பொருளாக பயன் படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காயுடன் தக்காளி சேர்த்து முகத்தில் பூசினால், சரும கருமை விரைவில் நீங்கும்.
வெள்ளரிக்காய் தக்காளி பேஸ்ஃபேக் தயார் செய்யும் முறை :
ஒரு துண்டு வெள்ளரிக்காயில், இரண்டு துண்டு தக்காளி சேர்த்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 1/2 ஸ்பூன் க்ரீம் மில்க், 1 சிட்டிகை மஞ்சள் தூள், 3 துளி எலும்பிச்சை, மற்றும் 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முகம் கழுவிய பின் காட்டன் துணியால் முகத்தை ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.