மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் இரண்டாவது முறை பதவியேற்றுள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று(மார்ச்.20) நடைபெற்றது. இதில்,மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, மாநில கவர்னர் இல. கணேசனை பிரேன் சிங் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மணிப்பூர் முதலமைச்சராக பிரேன் சிங் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு மாநில கவர்னர் இல. கணேசன் பதவி பிராமண செய்து வைத்துள்ளார்.