பட்ட பகலில் கை வரிசை காட்டிய மர்மநபர்கள்..!! பரபரப்பான பஜார் பகுதி..!!
பஜார் வீதியில் பட்ட பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த 54 ஆயிரம்ரூபாய் பணத்தை லாவகமாக மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராந்தம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி என்பவர் ஆரணியில் உள்ள வங்கிக்கு சென்று சுமார் 54ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் உள்ளபெட்டியில் வைத்துக் கொண்டு ஆரணி காந்தி சாலையில் உள்ள பிரபல ஸ்வீட்ஸ் கடைக்கு பொருட்களை வாங்க தனது இருசக்கரத்தை விட்டு கடை உள்ளே சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மூர்த்தியை பின்தொடர்ந்து வந்து இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் மூர்த்தி வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து காந்தி சாலையில் உள்ள சிசிடிவி காட்சியை சேகரித்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
பட்டபகலில் பஜார் வீதியில் இருசக்கர வாகனத்தை பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் திருடும் காட்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..