ரிவேர்ஸ் கீரில் திணறிய அரசு பேருந்து ஓட்டுநர்..!! கடுப்பான பயணிகள்..!!
ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து மேம்பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோத சென்றதால் பயணிகள் அச்சம் பேருந்தை திருப்புவதற்காக ரிவர்ஸ் கீர் போடும் போது ரிவர்ஸ் கீர் பழுதாகி போட முடியாமல் திணறிய அரசு பேருந்து ஓட்டுனர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி செல்லக்கூடிய அரசு பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த போது திடீரென பேருந்து நிலையம் எதிரில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் மீது மோத சென்றதால் பயணிகள் அச்சமடைந்து அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளனர்.
பின்னர் ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்ற போது ரிவர்ஸ் கீர் பழுதாகி ரிவர்ஸ் கீர் போட முடியாமல் திணறினார் இதனால் பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து பேருந்தை பின்னோக்கி தள்ளிய பின்னர் அங்கிருந்து ஓட்டுநர் ரிவர்ஸ் கீர் பழுதாகி உள்ள பேருந்திலேயே பயணிகளை ஏற்றி சென்றதால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் ஏற்பட்டது..
இதனால் பேருந்து நிலையத்தில். பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சில மணி நேரம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது…
மேலும் அரை மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக பேருந்து சென்றதால் இரவு நேரத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..