வீட்டில் திருட சென்ற போது நாய் குறைத்தல் மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்..!! சிசிடிவி யில் பதிவான காட்சி..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அல்லால புரத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமி, நாய்கள் குரைத்ததால் கொள்ளை முயற்சி கைவிட்டு தப்பி ஓட்டம், சிசிடிவி காட்சிகளை கொண்டு பல்லடம் போலீசார் தீவிர விசாரணை..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அல்லாலபுரம் கே.கே.கார்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் வயது 46. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தை களுடன் வசித்துக் கொண்டு தனியார் கம்பெனியில் பனியன் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமையன்று இரவு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு சேதமடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் முகமூடி மற்றும் தலைபாகை அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டை சுற்றிலும் நோட்ட மிட்ட பின் லைட்டை ஆப் செய்து விட்டு கம்பியால் கதவை உடைக்கும் காட்சி சிசிடிவி யில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்தேரி வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post