தனது மனைவி பெண் அல்ல என கோரி கணவன் உச்சநீதிமன்றத்தில் விநோதமான வழக்கை தொடர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு மாதவிடாய் இருப்பதாகக் கூறி சில நாட்கள் மனைவி, தான் பிறந்த வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அதன்பின், இருவரும் கணவன்- மனைவியாக வாழத் துவங்கியுள்ளனர். அப்போதுதான் கணவருக்கு தனது மனைவி உண்மையில் ஒரு பெண்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தீர்த்து கொள்ள கணவர் தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவருக்கு ‘இம்பர்ஃபோரேட் ஹைமென்’ எனப்படும் மருத்துவப் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் அப்பெண் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.