புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று(மார்ச்.14) காலை முதல் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து ஊழியர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று(மார்ச்.14) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை.
இருப்பினும், புதுச்சேரியில் தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.