அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பது என் வேலை..! சசிகலாவின் ஓபன் டாக்..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தோல்வியான சசிகலா ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்று பயணம் முடித்து விட்டு சென்னை வருவதற்காக கோவை விமான நிலையம் வந்துள்ளார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, கொங்கு மண்டலத்தின் சுற்று பயணம் எனக்கு மனநிறைவை கொடுத்தது.
எனது இந்த சுற்று பயணம் தொடரும்.., நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கட்டாயம் அதிமுக இணைந்துவிடும். அதிமுகாவை ஒன்றினைப்பதற்கான செயல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது அதிமுகாவின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் அது குறித்து நாங்கள் கொடுத்த பதில்கள் அனைத்தையும் நீங்கள் பார்த்து இருப்பீங்க.., உங்கள் அம்மா ஜெயலலிதா இருந்த பொழுது கட்சி எப்படி இருந்தது. அந்த கட்சி இப்போது இருக்கிறதா..? மீண்டும் அந்த நிலைமை வரும் அதை நான் உங்கள் பார்வையில் விட்டு விடுகிறேன்.
அதிமுக கட்சியில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே என் முதல் வேலை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதற்கான மன்னிப்பு கடிதம் எதுவும் கொடுக்கவில்லை.., அதை கொடுத்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். விரைவில் எங்களின் சந்திப்பு விரைவில் நடைபெறும்.., அதிமுகவை ஒன்று சேர்த்து மீண்டும் நாங்கள் யார் என்பதை காண்பிப்போம் என செய்தியாளர்கள் முன் சசிகலா இவ்வாறே பேசினார்.