ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் – மதிமுக எம்.எல்.ஏ கையெழுத்து..!!
மதிமுக சார்பில் ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம், ஆளுனரை பதவி நீக்க திருவாரூர் எம்.எல்.ஏ முதல் கையெழுத்து..
தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும், மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் செயல் படுவதோடு, தனி ஆதிக்கத்தை செலுத்தி தமிழக அரசுக்கும், சட்டமன்ற செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி, தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
அதன் முதற்கட்டமாக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி, குடியரசு தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இன்று திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது இந்நிகழ்சிக்கு வருகை தந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன், ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்வதற்காக, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கையெழுத்திட்டார்.
இவரை தொடர்ந்து கலைஞர் கோட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களிடமும் திருவாரூர் நகர ஒன்றியம் மதிமுக சார்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களை திரும்ப பெற கோரி கையெழுத்து போட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் டி ஆர் தமிழ்வாணன், நகரக் கழக செயலாளர் ஏ கே எம் கபிலன், முன்னாள் நகர செயலாளர் எஸ் ஜெயராமன், மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் த ஹரிராஜன், திருவாரூர் நகரப் பொருளாளர் எஸ் கிருஷ்ணன், திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சியில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டது, அதில் கையெழுத்திட்ட அனைவரும் மன மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்ட தாக தெரிவித்துள்ளனர்.