ஆளுநர் அவருடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேரலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை மாநிலத் தலைவர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியது..
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் முன்னாள் தமிழ்நாடு திமுக தலைவர் கலைஞர் அவர்களின் மக்கள் மேய சிந்தனையில் கலைஞர் காப்பீடு திட்டமாய் உதயமாகி பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக பரிணமித்து மக்களின் மருத்துவ பிணிப்போக்கும் மகத்தான திட்டமாக விளங்கி வருவது முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் திட்டத்தை 15 ஆண்டுகாலமாக மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள்.
தொடர்ந்து பேசிய முத்தரசன்..
ஆளுநர் ரவி அவர்கள் கூறியது கண்டனத்துக்கு உள்ளது. நீட் தேர்வில் விளக்கம் அளிக்க வேண்டுமென தொடர்ந்து திமுக அரசு அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆளுநர் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது ஆளுநர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பது போன்று பேசுகிறார் அவருடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு இயக்கத்தில் சேரலாம்.
நாங்குநேரி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு உடனடியாக எடுக்குமே என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.