தாயை பாலியல் வன்கொடுமை..!! வெளியான ஆதராம்..!! பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார்..!! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..?
கர்நாடக மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஜேடி எஸ் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏற்கனவே 300 வழக்குகளை நிலுவலையில் உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியே பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆனது..,
மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உள்ள குற்றங்கள் குறித்து பாஜக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர் மீது பாஜக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் பாஜக உதவியுள்ளது.., இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டிய பின்னரே பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி ரேவண்ண மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது புலனாய்வு குழு அதிகாரியிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.., அதில் அவர் கூறியதாவது.., பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் என் தாய் பல வீட்டு வேலை செய்து வருகிறார்..,
அம்மா ஸ்தானத்தில் இருப்பவர் என்று கூட பார்க்காமல் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி ரேவண்ணா என் தாயை பாலியல் துன்புறுத்தல் செய்தனர், அதற்கு என் தாய் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் என் கணவரின் வேலையை பறித்து எங்களை போலீசில் திருட்டு பட்டதில் பிடித்து கொடுத்து ஆயுள் முழுதும் வெளியே வராதபடி செய்துவிடுவதாக மிரட்டினார்கள்..
பிரஜ்வல் ரேவண்ணாவும் பலமுறை எனக்கு போன் செய்து ஆடையை கழற்ற சொல்லி எனக்கு வீடியோ கால் செய்வார்., நான் போனை எடுக்க மறுத்தால் என் தாயின் செல்போனில் இருந்து எனக்கு வீடியோ கால் செய்து நான் சொன்னதை செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தை அடியோடு அளித்து விடுவேன் என மிரட்டுவார்கள்..
நான்கு ஐந்து மாதங்களுக்கு மட்டுமே என் தாய் வீட்டிற்கு வருவார்., அப்போது அவரின் உடல் நிலையை வைத்தே அவர் எந்த அளவிற்கு துன்புறுத்த பட்டுள்ளார் என்பதை தெரிந்துக்கொண்டோம்., இதுபற்றி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை..,
நான் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட ரேவண்ணா என்னையும் கடத்தி சென்று நான்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தார்.., அவர் என்னிடம் பேசிய ஆடியோ, வீடியோ ஆதரங்கள் இதில் உள்ளது., தயவு செய்து ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கும் படி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்..
புகாரினை ஏற்ற புலனாய்வு குழு அதிகாரிகள் எச்.டி.ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.., வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மே 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு ப்ளூ கார்னர் நோட்டீஸ் “ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது குற்றவியல் விசாரணை தொடர்பான செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க” வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு “வழக்குக்கு அல்லது தண்டனையை அனுபவிக்க விரும்பும் நபர்களின் இருப்பிடம் மற்றும் கைது செய்ய” வெளியிடப்படும் ரெட் கார்னர் நோட்டீஸிலிருந்து வேறுபட்டது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..