திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், திருவிழாவின் சிகர விழாவான மகா தீபத்திருவிழா இன்று நடைபெற்றது.
மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதையடுத்தும் காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதை காண தமிழ்நாடு மட்டுமல்லது உலகெங்கிலும் இருந்து 30 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
இன்று பிற்பகல் திருவண்ணாமலையில் மழை பெய்தது. எனினும், மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தவாறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இதையடுத்து, திருவண்ணாமலையில் 14 ஆயிரம் காவலர்கள் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
700-க்கும் மேற்பட்ட சிசிடிவி, ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலைக்கு வருவோர் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள காவல்துறை சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்றுவதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.